ஸ்ருதி ஹாசனின் குரலில் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

சாமி ஸ்கொயர் படத்தை அடுத்து நடிகர் விக்ரம், ராஜேஷ் செல்வா இயக்கத்தில் நடிக்கும் படம் ‘கடாரம் கொண்டான்’. இது விக்ரமின் 56 வது திரைப்படமாகும். மேலும், கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும்  இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன் நடிக்கிறார்.  ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. இதனை தொடர்ந்து படத்தின் டீசர்  கடந்த ஜனவரி மாதத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.  இந்நிலையில் கடாரம் கொண்டான் திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிங்கிள் கமலின் மகளான ஸ்ருதி ஹாசனின் குரலில் அமைந்துள்ளது.

Sharing is caring!