ஸ்ரேயா நடுரோட்டில் நடனம்

தமிழில் ரஜினி, விஜய்யுடன் நடித்து பிரபலமான ஸ்ரேயா தற்போது நடுரோட்டில் நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகைகள் தங்களுக்கு பிடித்த வி‌டயங்களை செய்து அதை வீடியோ படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்கின்றனர். இதில் தற்போது நடுரோடு வரைக்கும் கூட வரத் தொடங்கிவிட்டார்கள்.

ரஜினி, விஜய் என்று பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள ஸ்ரேயா தற்போது நரகாசுரன் படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. தமிழில் புதிய படங்கள் எதனையும் ஒப்புக்கொள்ளாமல் இவர் காத்திருக்கிறார். இந்தியில் தட்கா என்ற ஒரு படத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நிலையில், வெளிநாடுகளுக்கு பறந்துவிடுகிறார் ஸ்ரேயா.

சமீபத்தில் வெளிநாடு சென்ற ஸ்ரேயா அங்குள்ள இயற்கை அழகை ரசித்து மகிழ்ந்தார். பின்னர் அப்பகுதியில் நடந்த திருவிழாவிற்கு சென்றவர் அங்கு நடந்த காட்சிகளை ரசித்தார். உற்சாக மிகுதியில் நடுரோட்டிலேயே நடனம் ஆடத் தொடங்கினார். அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

Sharing is caring!