ஸ்ரேயா வில்லியாகிறார்

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக நடித்து வந்தவர் நடிகை ஸ்ரேயா. எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமான இவர் குறுகிய காலத்திலேயே ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் என பல உச்சகட்ட நடிகர்களுடன் நடித்தார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு, தற்போது வெளியாக இருக்கும் நரகாசூரன் படத்தில் ஹீரோயினாக கம்பேக் கொடுக்கிறார் ஸ்ரேயா. ஹிந்தியில் பிரகாஷ்ராஜின் டட்டா படத்திலும் தெலுங்கில் வீர போஜா வசந்த ராயிலு மற்றும் கருட வேகா என்ற படங்களில் பிசியாக நடித்து வரும் ஸ்ரேயா, இதை அடுத்து மற்றொரு தெலுங்கு படத்தில் வில்லியாக நடிக்க இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

டாக்டர் ராஜசேகர் காஜல் அகர்வால் இணைந்து நடிக்கும் தெலுங்கு படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ‘அவே’ படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மா தான் இந்த படத்தையும் இயக்க உள்ளார். ராஜசேகருடன், ஸ்ரேயா அதிரடி வில்லியாக மோதும் இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கிறது.

Sharing is caring!