ஹன்சிகாவின் அழகு ரகசியம்

நடிகை ஹன்சிகா, தன் உடல் எடையை கணிசமாக குறைத்து விட்டு, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். தன் திரையுலக மற்றும் எதிர்காலம் குறித்து ஹன்சிகா கூறியதாவது: தமிழில், தற்போது 100, துப்பாக்கி முனை, மகா படங்களில் நடித்து வருகிறேன். அனைத்துமே வித்தியாசமான கதாபாத்திரங்கள்.

நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே, 50 படங்களில் நடித்தது பிரமிப்பாக உள்ளது. தமிழில் நடிப்பதை பெரிதும் விரும்புகிறேன். தமிழ் கற்று வருகிறேன். நான்கு கிலோ மட்டுமே குறைத்தேன். சாப்பாட்டுக்கு கட்டுப்பாடு கிடையாது. விரும்பியதை சாப்பிடுவேன். யோகா செய்வேன்.

சமீபத்தில் மகாநடி படம் பார்த்தேன். கீர்த்தி சுரேஷ் சிறப்பாக நடித்திருந்தார். திரையுலகில் ஸ்ரேயா ரெட்டி தான் என் தோழி. தோல்வியில் நிறைய பாடம் கற்கிறேன். இதுவரை மும்பையில் நான் தத்தெடுத்து வளர்த்து வரும் குழந்தைகள் 31 பேர் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Sharing is caring!