ஹன்சிகாவின் 50வது படத்தில் தலைகாட்டும் சிம்பு

புதுமுக இயக்குநர் ஜமீல் இயக்கும் ஹன்சிகாவின் 50வது திரைப்படமான ‘மகா’வில் நடிகர் சிம்பு ஒரு பாடலில் தலைக்காட்ட இருப்பதாக கூறப்படுகிறது.

ரோமியோ ஜூலியட், போகன் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் லட்சுமனனின் உதவி இயக்குநரான ஜமீல் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் ஹன்சிகா நாயகியாக நடித்து வருகிறார்.

இது ஹன்சிகாவின் 50வது திரைப்படமாகும். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைப்பாளராக பணிப்புரிய உள்ளார். சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகின. அதில் ஹன்சிகா கஞ்சா பிடிப்பது போன்று இருந்த காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. இதில் ஒரு பாடலுக்கு சிம்பு தலைக்காட்ட இருக்கிறாராம். அதற்காக அவர் 7 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி உள்ளதாக தெரிகிறது.

இதற்கு முன்னர் வாலு படத்தில் ஹான்சிகாவுடன் சிம்பு நடித்திருந்தார். அந்த படத்தின் படப்பிடிப்பின் போது இருவரும் காதலிக்க தொடங்கினர். பின்னர் மனஸ்தாபம் ஏற்பட பிரிந்தனர். இந்நிலையில் இந்த படத்தில் சிம்புவும் ஹன்சிகாவும் இணைந்து நடிக்க உள்ளனர்.

Sharing is caring!