ஹன்சிகா மேல் போலீசிலும் புகார்

புதியவர் இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்து வரும் 50வது படம் மஹா. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. ஹன்சிகா காவி உடையணிந்து, கஞ்சா இழுத்தபடி, அருகில் சாமியர்கள் இருக்க, பின்னணியில் காசி இருப்பது போன்று இடம் பெற்றிருந்தது. இது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக கூறி ஏற்கனவே கண்டனங்கள் எழுந்துள்ளன. வாணியம்பாடியில் உள்ள போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில், இந்து மக்கள் முன்னணி சார்பில் நாராயணன் என்பவர் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அதில், இந்து மதம் மற்றும் பெண் துறவிகளை அவமதிக்கும் வகையில் ஹன்சிகா புகைப்பிடிப்பது போன்று உள்ளது. எனவே, இப்படத்தில் நடித்த ஹன்சிகா மற்றும் இயக்குநர் ஜமீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Sharing is caring!