ஹன்சிகா….50 வது பட லுக்

ஹன்சிகாவின் 50-வது படத் தலைப்பை  நடிகர் தனுஷ் வெளியிட இருக்கிறார்.

தமிழில் தனுஷ் ஜோடியாக ‘மாப்பிள்ளை’ படத்தில் அறிமுகமான நடிகை ஹன்சிகா, பல பிரபல ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துவிட்டார். தெலுங்கு மற்றும் தமிழில் குறிகிய காலத்தில் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார் ஹன்சிகா. இந்நிலையில், தன்னுடைய 50-வது படத்தில் ஹன்சிகா நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் இயக்குநர் ஜமீல். எக்ஸெட்ரா என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் நேற்று அறிவிக்கபடவிருந்தது ஆனால் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு ஒத்திவைக்க பட்டது. இந்த நிலையில் சமுக வலைதளத்தில் ஹன்சிகா தன் படத்தின் டைட்டில் நாளை அறிவிக்கப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் தனுஷ், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதை வெளியிட உள்ளார் என்றும் கூறியுள்ளார் ஹன்சிகா. செப்டம்பர் மாதம் படபிடிப்பு வேலைகள் தொடங்கவுள்ளது.

Sharing is caring!