ஹரிஸ் கல்யாணின் அடுத்த படம் இதுதான்?

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் இரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக அவர் ஒரு நகைச்சுவை கலந்த ரொமான்ஸ் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்தின் தலைப்பு ‘தனுசு ராசி நேயர்களே’ ஆகும். இந்த படத்தை நடிகரும் இயக்குனருமான சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கவுள்ளார்.

ஜிப்ரான் இசையமைப்பில், கோகுலம் மூவீஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், ஜோசியத்தில் நம்பிக்கையுள்ள ஒரு இளைஞராக நடிக்கின்றார். அதேநேரம் இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர்.

இத்திரைப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிக நடிகையர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!