ஹரிஸ் கல்யாணின் “ஏய் கடவுளே” வெளியீடு

ஹரிஷ் கல்யாண்  நடித்துள்ள  இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தை ,  ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஷில்பா மஞ்சுநாத்  ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.  ஜீரோ படத்தை தயாரித்த மாதவ் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தையும் தயாரித்துள்ளது. மேலும் கடந்த மார்ச் 15ஆம் தேதி இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்  திரையிடப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்திலிருந்து “ஏய் கடவுளே” என்ற பாடல்  வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹரிஷ் கல்யாண்  ஒரு குத்தோட ஆரம்பிப்போமா இந்த நாள? என்று குறிப்பிட்டுள்ளார், ஹரிஷ் கல்யாணின்.  இந்த ட்விட்டுக்கு, நைஸ் குத்து என ரீடுவிட் செய்துள்ளார்  நடிகர் விவேக்.

“ஏய் கடவுளே”பாடல் வரிகளை   ரஞ்சித் ஜெயக்கொடி எழுதியுள்ளார், மேலும்  இந்த பாடலை, விஜய் சேதுபதி, ஹரிஷ் கல்யாண் இணைந்து பாடியுள்ளனர்.

Sharing is caring!