ஹரி இயக்கும் படத்தில் சூர்யா

ஹரி இயக்கத்தில் ஆறு, வேல், சிங்கம், சிங்கம்-2, சிங்கம்-3 படங்களில் நடித்துள்ளார் சூர்யா. இந்நிலையில் சாமி-2 வைத் தொடர்ந்து மீண்டும் ஹரி இயக்கும் படத்தில் நடிக்கபோகிறார் அவர்.

இதுகுறித்து ஹரி அளித்துள்ள ஒரு பேட்டியில், எனது அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார். சென்ட்டிமென்ட் கலந்த அதிரடி கதையில் படம் உருவாகிறது. வேல் படத்தை விட கூடுதல் சென்ட்டிமென்ட் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

தற்போது, என்ஜிகே, கே.வி.ஆனந்த் படங்களில் நடித்து வரும் சூர்யா, அதன்பிறகு இறுதிசுற்று சுதா இயக்கும் படத்திலும், அதையடுத்து, ஹரி படத்திலும் நடிக்க உள்ளார்

Sharing is caring!