ஹாலிவுட் படத்திற்கு வசனம் எழுதும் இயக்குனர் முருகதாஸ்

சென்னை:
ரஜினியை வைத்து இயக்கும் படத்தின் பணிகளுக்கு இடையே ஹாலிவுட் படத்திற்கு தமிழ் வசனம் எழுதும் பணியையும் மும்முரமாக செய்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

முருகதாஸ் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர். தமிழ், தெலுங்கு, இந்தி என கொடிக்கட்டி பறப்பவர். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார், இப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் வேலையில் பிஸியாக இருக்கிறார்.

இந்த நேரத்தில் கூட ஒரு ஹாலிவுட் படத்திற்கு தமிழில் வசனம் எழுத இருக்கின்றாராம். அது என்ன படம் தெரியுமா? உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் Avengers Endgame படத்திற்கு தானாம்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!