‘ஹிட்’ அடிக்குமா?

சூர்யா, கீர்த்தி சுரேஷ் என, இருவருமே, தானா சேர்ந்த கூட்டம் படத்துக்காக, மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். சமீபகாலமாக, இருவருக்குமே பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. இதனால், இந்த படத்தின் மீது, அவர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள, ‘சொடக்கு மேலே சொடக்கு’ பாடல், பட்டி தொட்டி எங்கும் ஒலிப்பதால், படமும், ‘ஹிட்’ அடிக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறது, படக்குழு. நானும் ரவுடி தான் படத்துக்கு பின், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகும் படம் இது.

நயன்தாராவுடன் ஏற்பட்டுள்ள நெருக்கமான நட்பு காரணமாக, விக்னேஷ் சிவனின் அடுத்த படத்திலும், நயன்தாரா தான், ஹீரோயினாக நடிப்பார் என, பலரும் கூறி வந்தனர். ஆனால், கீர்த்தி சுரேஷை ஹீரோயினாக்கி விட்டார், விக்னேஷ் சிவன்.

Sharing is caring!