ஹிட் வரிசைக்கு போகாதா! கஜினிகாந்த் வசூல் டல்

சென்னை:
எதிர்பார்த்த வெற்றி கிடைக்கலையே… கிடைக்கலையே என்று படக்குழு நொந்து போய் உள்ளனராம். இதனால் கஜினிகாந்த் படம் ஹிட் வரிசையில் போய் உட்கார்வது சிரமம்தான் போல் இருக்கு.

ஆர்யா நடிப்பில் சந்தோஷ் இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் கஜினிகாந்த். இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பில் இருந்தது.

படமும் சுமாராக இருக்க, ஓரளவிற்கு ஹிட் அடிக்கும் என்று எதிர்ப்பார்த்தார்கள், ஆனால் இரண்டு நாட்கள் முடிவில் இப்படம் ரூ 4 கோடி தான் வசூல் செய்துள்ளதாம். எதிர்ப்பார்த்ததை விட மிக குறைந்த வசூல் என கூறப்படுகிறது. இதனால் இப்படம் ஹிட் வரிசையில் இடம்பிடிப்பது கொஞ்சம் கஷ்டம் தான் என்கிறார்கள்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!