ஹிப் ஹாப் தமிழாவின் ‘மாணவன்’ யூடுபில் கலக்கல்

சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ‘மாணவன்’ ஆல்பம் வெளியிடப்பட்டது.

இண்டிபெண்டண்ட் ஆல்பம் மூலமாக சமூக வலை தளங்களில் பிரபலமானவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இவர் தற்போது பாடகர், பாடலாசிரியர், நடிகர், இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்த்துளார். சுந்தர்.சி தயாரிப்பில் மீசைய முறுக்கு என்னும் திரைப்படம் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் களம் இறங்கினார் ஆதி. இந்த படத்தை இயக்கிய ஹிப் ஹாப் தமிழா பல யூடுப் கலைஞர்களுக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

‘மாணவன்’ என்று பெயரிடப்பட்ட இந்த ஆல்பத்தின் போஸ்டரை ஹிப் ஹாப் தமிழா தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மீசைய முறுக்கு படத்தில் ஆதிக்கு தம்பியாக நடித்துள்ள ஆனந்த இந்த பாடலை இயக்கியுள்ளார். நாளைய சமுதாயத்தினை குறித்து உருவாகியுள்ள இந்த ‘மாணவன்’ ஆல்பம் இளைஞர்கள் மத்தியில்  டிரன்ட் ஆகி வருகிறது. ஒவ்வொரு மாணவனின் சக்தியை உணர்த்தும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது என்று கூறலாம்.

சமுக வலைதளங்களில் எதிர்பார்க்காத வரவேற்பையும் இந்த ஆல்பம்  பெற்றுள்ளது.மேலும் ஆர்.ஜே விக்னேஷ், விஜய், நக்ஷத்ரா போன்ற பல யூடுப் பிரபலங்கள் இந்த பாடலில் இணைந்து நடித்துள்ளனர். யூடுபில் ‘மாணவன்’ முதலாவது டிரண்டிங் வீடியோவாக இருப்பது குறிப்பிடதக்கது.

Sharing is caring!