ஹீரோவாகிறார் பிக்பாஸ் புகழ் ஷாரிக்

சென்னை:
ஹீரோவாகிறார்… பிக்பாஸ் புகழ் ஷாரிக் என்று கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் ரியாஸ் கானின் மகன் ஷாரிக். இவர் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு அதிகம் பிரபலமானார். அவர் நடிகை ஐஸ்வர்யா தத்தாவை காதலிப்பதாக கூறியது பெரிய சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் அவர் தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவர் நடிக்கவுள்ள படத்திற்கு உக்ரம் என பெயரிட்டுள்ளனர். அட்டு என்கிற படத்தை இயக்கிய ரத்தன் லிங்கா அடுத்து இந்த படத்தை இயக்கவுள்ளார்.

அட்டு படத்தில் ஹீரோயினாக நடித்த அர்ச்சனா, ஷாரிக்கின் ஜோடியாக நடிக்கிறார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!