ஹீரோவுக்கு நிகரான வில்லன் வேடம் – பரிசீலனை

பாகுபலி படங்களை தொடர்ந்து ராம்சரண், ஜூனியர் என்டிஆரை கொண்டு ஒரு படத்தை இயக்குகிறார் ராஜமவுலி. படப்பிடிப்பிற்கு முந்தைய பணிகள் நடந்து வருகின்றன.

பொதுவாக ராஜமவுலியின் படங்களில் ஹீரோவுக்கு நிகரான வில்லன் வேடம் இருக்கும். அந்தவகையில் இந்த மல்டி ஹீரோ படத்தில் இந்தியா முழுக்க உள்ள ரசிகர்களுக்கு பரிட்சயமான வில்லனாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ள ராஜமவுலி, இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் பல முன்னணி நடிகர்களை அழைத்து தனது கதாபாத்திரத்திற்கேற்ற உடல்மொழி கொண்டவர்களை பரிசீலனை செய்து வருகிறாராம்.

தென்னிந்திய நடிகர்களை விட பல பாலிவுட் நடிகர்கள் ராஜமவுலியை ஐதராபாத்தில் சந்தித்து வருகிறார்களாம். மேலும், நவம்பர் மூன்றாவது வாரத்தில் படப்பிடிப்பை தொடங்கும் ராஜமவுலி, அதற்கு முன்பே வில்லன் நடிகர் யார் என்பதை அறிவிக்கவும் முடிவு செய்திருக்கிறாராம்.

Sharing is caring!