10 வருட சவால்

அவ்வப்போது வாட்டர் பக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்ச், நில்லு நில்லு சேலஞ்ச் என ஏதாவது புதுப்புது சவால்களை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கமாகிவிட்டது. இவையெல்லாம் கொஞ்சம் ஆபத்தான சவால்கள் என்றாலும் தற்போது 1௦ இயர்ஸ் சேலஞ்ச் என்கிற புது சவாலை ஆரம்பித்து வைத்துள்ளார்கள். ஒருவர் தான் பத்து வருடத்திற்கு முன்பு இருந்த புகைப்படத்தையும் தற்போது இருக்கும் புகைப்படத்தையும் இணைத்து ஒன்றாக சோசியல் மீடியாவில் வெளியிடுவதுதான் இந்த சவாலில் தீம்.

பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு தங்களது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் வருகிற ராஷி கண்ணாவும் தனது இரண்டு விதமான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பத்து வருடத்திற்கு முன்பு பள்ளி மாணவியாக இருக்கும் அவரது தோற்றத்தையும், தற்போது நடிகையாக இருக்கும் அவரது தோற்றத்தையும் பார்க்கும்போது நமக்கே நம்புவதற்கு சிரமமாக இருக்கிறது

இதையே ராசி கண்ணாவும் குறிப்பிட்டு, “பத்து வருடத்திற்கு முன்பு என் உருவம் குறித்து பல விமர்சனங்களை நான் சந்தித்தேன்.. ஆனால் அவற்றையெல்லாம் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு நிச்சயம் ஒருநாள் சாதித்துக் காட்டுவேன்… என் பெற்றோருக்கு பெருமை சேர்ப்பேன்.. நான் உறுதியாக நம்பினேன் இந்த பத்து வருடத்தில் அதை நான் சாதித்து விட்டேன் என நினைக்கிறன். எப்போதும் தன்னம்பிக்கையை கைவிடாதீர்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்” கூறியுள்ளார் ராஷி கண்ணா.

Sharing is caring!