100வது படமா? அதர்வாவுக்கா…? அதற்குள்ளா!

சென்னை:
என்னது? அதற்குள் 100 வது படமா? இதுதான் கோலிவுட்டை கலக்கிய செய்தி. என்ன விஷயம் தெரியுங்களா?

தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமாக இருந்த நடிகர் முரளி. இவரது மகன் அதர்வா தற்போது இளம் நடிகராக வளர்ந்து வருகிறார்.
இவரது புதிய படத்தின் பற்றிய அறிவிப்பு வெளியாகி அனைவரையும் குழப்பி விட்டது. என்ன காரணம் தெரியுங்களா? 100thefilm என்ற டேக் தான்.

சில வருடங்களுக்கு முன்பு நடிக்க வந்த அதர்வா எப்படி 100வது படத்தில் நடிக்கிறார் என்ற சந்தேகம் தான். ஆனால் இவரது புதிய படத்தின் பெயர்தான் இந்த 100thefilm. இப்படத்தில் அதர்வா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது.

டார்லிங் பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கும் இப்படத்தில் ஹன்சிகா நாயகியாக நடிக்கிறார். விக்ரம் வேதா சாம் இசையமைக்கிறார். இந்த படத்திற்குதான் இப்படி ஒரு வித்தியாசமான விளம்பரம் செய்துள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!