100 நாள் இன்னொரு பிக்பாஸ் இருக்கு… பாலாஜியிடம் கூறிய நித்யா

சென்னை:
“நீ வெளியில் வந்த பிறகு 100 நாள் இன்னொரு பிக்பாஸ் இருக்கு” என பாலாஜியிடம் நித்யா கூறினார்.

பிக்பாஸ் வீட்டுக்கு வந்த நித்யா, பாலாஜியிடம் மன்னிப்பு கேட்டார். ”9 வருடமாக இல்லாமல் உன்னை இப்போது அழவைத்துவிட்டேன்”
நான் உனக்கு பாப்பாவை தர மாட்டேன்னு நான் எப்போவுமே சொல்லல. நீ மாறினால் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளோம். ஆனால் அதற்கு பிக்பாஸ் பிளாட்பார்ம் இல்லை.

வெளியே வந்து நீ நிஜமாகவே மாறியிருந்தால் கண்டிப்பாக உன்னை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளோம். நீ இல்லாமல் இருப்பது எங்களுக்கு கஷ்டமாக தான் உள்ளது. நீ கொடுத்த கஷ்டத்தை விட இது பெரிய கஷ்டமாக இல்லை. நீ மாறிட்டனு எல்லாரும் சொல்றாங்க.

ஆனால் நீ இன்னும் நெறைய மாறனும்னு நான் நினைக்குறேன். இதுவரை பலமுறை மாறிட்டேன் மாறிட்டேன்னு நீ பிராமிஸ் பண்ணி நம்பவைச்சு ஏமாத்தியிருக்க! இந்த முறையாவது இது உண்மையாக இருக்க வேண்டும். நீ வெளியில் வந்த பிறகு 100 நாள் இன்னொரு பிக்பாஸ் இருக்கு. இவ்வாறு பாலாஜியிடம் நித்யா தெரிவித்தார். இதனால் நித்யாவின் மனம் மாறி வருகிறது. இருவரும் சேரும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!