100% லவ் என்ற படம், தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்

தெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம், தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே நடித்துள்ள இந்த படத்தை சந்திரமெளலி இயக்கியிருக்கிறார். ரிலீசுக்கு தயாராகி விட்ட இந்த படத்தின் சிங்கிள் டிராக் (அக்., 4) வெளியாகிறது.

இந்த படத்தில் எலக்ட்ரோ பாப் இசை பாணியில் ஒரு வானம் -என்றொரு பாடலுக்கு புதுமையான முறையில் இசையமைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். அந்த பாடலை ஜி.வி.பிரகாசுடன் இணைந்து ஆண்ட்ரியா பாடியிருக்கிறார். இந்த பாடலின் சிங்கிள் டிராக் தான் நாளை வெளியாகிறது.

Sharing is caring!