100 வது நாள் வெற்றியில் இரும்புத்திரை

விஷால் நடிப்பில் கடைசியாக வெளியானப் படம் ‘இரும்புத்திரை’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்தார். ராணுவ அதிகாரியாக விஷால் நடித்திருந்தார். தேவி எனும்  மனநல மருத்துவராக சமந்தா நடித்திருந்தார். ஒய்ட் டெவில் எனும் கேரக்டரில் அர்ஜுன் மிரட்டியிருந்தார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்திருந்த இந்தப் படத்தை லைகா புரடக்‌ஷன்ஸ் வெளியிட்டது. படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.

தமிழில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்து, ‘அபிமன்யுடு’ என்ற பெயரில் வெளியிடப் பட்டது. அங்கும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இன்றோடு இந்தப் படம் வெளியாகி 100 நாட்கள் ஆகிறது. அதோடு இன்னும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதைப்பற்றி நடிகர் விஷால், ‘இப்படி ஒரு உண்மையான படத்தில் நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்ன ஒரு வெற்றி! என்னுடைய குழுவினருக்கு வாழ்த்துகள்!’ என தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

Sharing is caring!