1000 தியேட்டர்களில் வெளியாகிறது பரத் நடித்த பொட்டு படம்

சென்னை:
பரத் நடிப்பில் உருவாகியுள்ள பொட்டு படம் 1000 திரையரங்குகளில் வெளியாகிறதாம்.

வடிவுடையான் இயக்கத்தில் பரத் – நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடிப்பில் உருவாகி இருக்கும் `பொட்டு’ படம் 1000 திரையரங்குகளில் ரிலீசாகவிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `பொட்டு’.

வடிவுடையான் இயக்கியிருக்கும் இந்த படத்தில் பரத் நாயகனாகவும், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நாயகிகளாகவும் நடித்துள்ளனர். தம்பி ராமையா, பரணி, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ் ராம், ஷாயாஜி ஷிண்டே, மன்சூர் அலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படம் பற்றி இயக்குனர் தெரிவித்துள்ளதாவது:

பரத் நடித்த படங்களிலேயே இந்த படம் தான் முதன் முறையாக 1000 தியேட்டர்களில் ரிலீஸாகிறது. அதுவும் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படம் வெளியாகிறது. கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் நேரடியாக தமிழ் ரிலீஸ் செய்கிறோம்.

மருத்துவக் கல்லூரி பின்னணியில் உருவாகியுள்ள படு பயங்கரமான ஹாரர் படம் இது. இந்த படத்தில் பரத் பெண் வேடத்தில் நடித்துள்ளார். அதற்காக அவர் தனது உடல் மொழிகளை மாற்றி அந்த கதாபாத்திரமாக மாறி சிறப்பாக நடித்துள்ளார். படம் குழந்தைகள் முதல் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் என்றார்.

இனியன் ஹரீஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்திருக்கிறார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!