12 வயதுக்கு குறைவானவர்கள் தனியான சர்கார் படத்தை பார்க்க அனுமதியில்லை

சென்னை:
விஜய்யின் சர்கார் படத்தை 12 வயதுக்கு குறைவானவர்கள், தனியாகப் பார்க்க அனுமதியில்லை என்று தணிக்கை தரப்பட்டுள்ளது.

விஜய்யின் சர்கார் படம் உலகம் முழுவதும் படு பிரம்மாண்டமாக வெளியாகிறது. என்ன தான் நடுவில் சின்ன சின்ன பிரச்சனை வந்தாலும் ரிலீசிற்கு எந்த தடங்கலும் இல்லை.

படம் இந்தியாவை தாண்டி மற்ற நாடுகளிலும் வெளியாகிறது. இதில் பிரிட்டிஷ் தணிக்கை வாரியம் சர்கார் படம் குறித்து சில விவரங்களை வெளியிட்டுள்ளது. 12 வயதுக்கு குறைவானவர்கள், தனியாகப் படத்தைப் பார்க்க அனுமதியில்லை என்று தணிக்கை தரப்பட்டுள்ளது. அப்படி பார்க்க வேண்டுமென்றால், பெரியவர்கள் துணையுடன் பார்க்கலாம்.

படத்தில் மிதமான வன்முறை, அச்சுறுத்தல், காயங்கள், வலுவான மொழி இருப்பதாகவும் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!