13 வருடங்களின் பின் தனுஷுடன் ஜோடி சேரும் சினேகா

புதுப்பேட்டை திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தற்போது வெற்றிமாறன் இயக்கும் அசுரன் திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். அசுரன் படத்தை அடுத்து கொடி பட இயக்குநர் துரை செந்தில்குமாருடன் கைகோர்க்கிறார் தனுஷ். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்தமாதம் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மகன், தந்தை என்ற இரண்டு கதாபாத்திரங்களில் தனுஷ் நடிக்கிறார். அதில் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கும் தனுஷூக்கு ஜோடியாக நடிக்க நடிகை சினேகா ஒப்பந்தமாகியுள்ளார். புதுப்பேட்டை படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகும் நிலையில் இந்த ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க உள்ளது.

Sharing is caring!