18 வயசு வித்தியாசம்… வித்தியாசம்… காதல் கதையை சொன்ன நித்யா

சென்னை:
18 வயசு வித்தியாசம்… வித்தியாசம் என்று தங்களின் காதல் கதையை சொல்லியிருக்கார் நித்யா.

நடிகர் பாலாஜி மற்றும் அவரது மனைவி இருவரும் தற்போது பிக்பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களாக உள்ளனர். இருவரும் சண்டை போட்டு ஒருவருடமாக பிரிந்திருந்த நிலையில், விவாகரத்து வழக்கும் நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது அவர்களது காதல் கதையை பிக்பாஸ் வீட்டில் கூறியுள்ளார் நித்யா. அவர்கள் இருவருக்கும் 18 வயது வித்யாசமாம். நித்யாவின் அக்கா மூலம் தான் பாலாஜியின் அறிமுகம் கிடைத்ததாம்.

ஒரு சூப் கடையில் வைத்து பாலாஜி ப்ரொபோஸ் செய்த பிறகு சில மாதங்கள் கழித்து ஏற்றுக்கொண்டாராம். நித்யா வீட்டில் ஒப்புக்கொள்ளாததால் இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டனராம். பின் நித்யா வீட்டினர் வந்து பாலாஜியை அடிக்கும் அளவுக்கு சண்டை போட்டார்களாம். பின் “நீ எனக்கு மகளே இல்லை” என கூறிவிட்டு சென்றுவிட்டார்களாம்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!