2 ஆயிரம் தியேட்டர்களில் சண்டக்கோழி- 2 ரிலீஸ்: விஷால்

விஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், வரலட்சுமி நடித்துள்ள சண்டக்கோழி 2 படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்த விஷால் சண்டக்கோழி படம் ஆயுத பூஜைக்கு வெளிவருவதாகவும், தென் மாநிலங்களில் 2 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிடப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:

25படங்களில் என்னோடு பணியாற்றிய அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். சண்டக்கோழி பாகம் ஒன்னு எனக்காக எழுதப்பட்ட கதை அல்ல.அது விஜய் மற்றும் சூர்யாவுக்காக எழுதப்பட்டது.கதை பற்றி கேள்வி பட்டதும் லிங்குசாமி எனக்கு இருபது வருட நண்பர் அந்த உரிமையில் அந்த கதையில் நான் நடிக்கின்றேன் என்று கூறினேன். அப்போது செல்லமே படம் வெளிவரவில்லை. சண்டக்கோழியில் என்னை ஆக்ஷன் ஹீரோவாக நிறுத்திவிட்டார்.

அங்கே தொடங்கியதுதான் என் வாழ்கை.கனல் கண்ணன் மாஸ்டர் அந்த படத்தில் கொடுத்த தைரியம் ஆக்ஷன் ஹீரோவாக என்னை வெளிப்படுத்தியது.தாவணி போட்ட தீபாவளி பாடல் என்னை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு போய் சேர்த்தது. பிறமாநிலத்திலும் பந்தைய கோழி என்று வெளியிட்டார்கள்.லிங்கு சாமி நினைத்திருந்தால் பெரிய ஹீரோவை வைத்து படம் எடுத்திருக்கலாம்.என் அப்பா நினைத்திருந்தால் அப்படத்தை காப்பி ரைட்சுக்கு பல கோடிக்கு விற்பனை செய்திருக்கலாம்.ஆனால் என் அப்பா என்னை தெலுங்கிலும் ஹீரோவாக நிறுத்த நினைத்தார்.

அன்று முதல் 24படம் முடித்து 25வது படத்திற்காக உங்கள் முன்னால் நிற்கின்றேன்.அதுவும் சண்டை கோழியே 25வது படமாக அமைந்தது தான் எனக்கு சாதனையாக தோன்றுகிறது.கீர்த்தி அவர்களுடைய மற்ற படங்களை பார்த்து இருக்கின்றேன்.அவர்களுடைய மகாநதி பார்த்தேன் அதை பார்த்து அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என கூறினேன்.அவருடன் நடித்தது எனக்கு சந்தோசமாக உள்ளது.கீர்த்தி சுரேஷ் எழுத்தாளர்.நான் படம் இயக்குவேனோ இல்லையோ கட்டாயம் கீர்த்தி சுரேஷ் இயக்குநராக வலம் வருவார்.

வீட்டில் எங்க அப்பாவை எப்படி பார்த்தேனோ அதே போல் செட்டில் ராஜ்கிரன் சாரை பார்த்தேன். சண்டக்கோழி -2 அக்டோபர்-18ல் வெளிவரவுள்ளது.அதுவும் ஆயுத பூஜை அன்று.பெரிய அளவில் வெளிவரவுள்ளது.2000பிரிண்ட் போட்டு கோலாகலமான திருவிழா போன்று வெளிவரும்.என்றார் விஷால்.

Sharing is caring!