2 மருமகன்களுடன் ரஜினி இருக்கும் படம் செம வைரல்

சென்னை:
முதன்முறையாக 2 மருமகன்களுடன் ரஜினி இருக்கும் படம் வெளியாகி உள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்களுக்கு வெளியான பேட்ட படத்தின் 50 வது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. ரஜினிக்கு ஜோடியாக இந்த படத்தில் சிம்ரன் மற்றும் திரிஷா நடித்திருந்தனர். விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் 50வது நாள் கொண்டாட்டம் கேக் வெட்டி கொண்டாப்பட்டது. விழாவில் பாபி சிம்ஹா, அனிருத், மேகா ஆகாஷ் மற்றும் படத்தில் நடித்த பலர் கலந்துக்கொண்டனர். ரஜினியின் மருமகன்களான தனுஷ் மற்றும் விசாகன் ஆகியோருட் கலந்துக்கொண்டர்.

ரஜினி தனது இரு மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தையும், 50 வது நாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சன்பிக்சர்ஸ் அதன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ரஜினி தனது இரு மருமகன்களுடன் இருக்கும் முதல் புகைப்படம் இது என கூறப்படுகிறது. எனவே இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!