‘2.0’. இப்படத்தின் இரண்டு பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில், ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘2.0’. இப்படத்தின் இரண்டு பாடல்கள் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 27ம் தேதி துபாயில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்பட்டது.

‘எந்திர லோகத்து சுந்தரியே…, ராஜாளி…’ என்ற அந்த இரண்டு பாடல்களும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இதன் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ யு-டியூப்பில் காலை 11 மணிக்கு வெளியிட்டனர்.

வெளியான 9 மணிநேரத்தில், எந்திர லோகத்து சுந்தரியே… பாடலுக்கு 4.32 லட்சம் பார்வைகளும், 28 ஆயிரம் லைக்குகளும், ராஜாளி… பாடலுக்கு 5.91 லட்சம் பார்வைகளும், 39 ஆயிரம் லைக்குகள் மட்டுமே கிடைத்தன.

இப்படத்தில் உள்ள மூன்றாவது பாடலை இன்னும் வெளியிடவில்லை. நா.முத்துக்குமார் எழுதிய ‘புல்லினங்காள்…’பாடலை எப்போது வெளியிடுவார்கள் என்று தெரியவில்லை.

Sharing is caring!