2.0 படத்தின் இடையில் திரையிடப்பட்ட விஸ்வாசம் மோஸன் போஸ்டர்

சென்னை:
2.0 படத்தின் இடையில் விஸ்வாசம் படத்தின் மோஸன் போஸ்டரும் திரையிடப்பட்டதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்இந்திய சினிமா ரசிகர்களே ஆவலுடன் எதிர்ப்பார்த்த 2.0 நேற்று திரைக்கு வந்துள்ளது.

இப்படம் ரஜினி ரசிகர்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த மக்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் 2.0 கண்டிப்பாக இதுவரை இல்லாத அளவிற்கு வசூல் சாதனை குவிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களே தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 2.0 படத்தை திரையிட்ட திரையரங்குகளில் இடை இடையே மற்ற படங்களின் டீசர், ட்ரெய்லரும் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. அதில் விஸ்வாசம் மோஷன் போஸ்டரும் திரையிட்டுள்ளனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அஜித் ரசிகர்கள் தியேட்டருக்குள் ஆட்டம் போட்டுள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!