2.0 படத்தின் டீசர் பார்வைகள் மட்டுமே ஒன்றரை கோடி

ஷங்கர் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் 2.0 படத்தின் டீசர், கடந்த வாரம் வெளியானது. யு டியூபில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டீசரின் பார்வைகள் மட்டுமே ஒன்றரை கோடியைத் தாண்டியது.

ஆனால், டீ சருக்கான லைக்ஸ் 5 லட்சத்தை மட்டுமே கடந்துள்ளது. தமிழில் இதுவரை அதிக லைக்குகளைப் பெற்ற மெர்சல் டீசரின் 10 லட்ச லைக்ஸ் சாதனையை 2.0 டீசரால் இன்னும் முறியடிக்க முடியவில்லை.

3 கோடி பார்வைகளைப் பெற்றுள்ள ஹிந்தி டீசர் கூட இப்போது தான் 8 லட்சம் லைக்குகளை நெருங்கி வருகிறது.

Sharing is caring!