2.0 படத்தின் டீஸர் ஆக.15ல் ரிலீஸ்… ரிலீஸ்…!

சென்னை:
ஆக. 15ம் தேதி 2.0 படத்தின் டீஸர் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் தயாராகிக்கொண்டிருக்கும் 2.0 படத்திற்காக ரசிகர்கள் வருடக்கணக்கில் காத்துக்கொண்டிருக்கின்றனர். படம் நவம்பர் 29ம் தேதி வெளியாகும் என இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது.

இந்நிலையில் 2.0 படத்தின் டீஸர் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. டீஸர் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகலாம் என ரசூல் பூக்குட்டி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரஜினி ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!