“2.0 படத்தின் வில்லன் கேரக்டர் கமலை நினைத்து உருவாக்கப்பட்டதாம்”

சென்னை:
2.0 படத்தின் வில்லன் கேரக்டர் கமலை மனதில் வைத்துதான் எழுதப்பட்டது என்று தெரிய வந்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸை ஷங்கரின் 2.0 படம் தான் ஆக்கிரமித்துள்ளது. சுமார் 15000 தியேட்டர்களில் வெளிவந்துள்ள இந்த படம் அனைத்து இடங்களிலும் சாதனை வசூல் பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரம் முதலில் நடிகர் கமல் ஹாசனை மனதில் வைத்து தான் எழுதப்பட்டது என எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளார். பறவையியல் நிபுணரான சலிம் அலியை போல இருக்கவே பக்சிராஜன் கதாபாத்திரம் எழுதப்பட்டதாம்.

மேலும் அந்த ரோலில் நடிக்க ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் மறுத்தபிறகு அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகர் அக்சய் குமார் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!