2.0 படத்தில் கைபேசிகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதால் படத்திற்கு சிக்கல்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி காந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தில் கைபேசிகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மனுதாக்கல் செய்துள்ளதால், 2.0 படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிவரும் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. ஹொலிவுட் தரத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோரும் நடித்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பலமுறை படத்தை வெளியிடத் திட்டமிட்டு கிராபிக்ஸ் வேலைகள் முடிவடையாத நிலையில், படம் வெளியாகவில்லை. தற்போது படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து நாளை (29) வெளியாகவுள்ளது.

2.0 படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லரில் கைபேசிகளை வைத்து அதிகமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், அவற்றை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி 2.0 படத்தை மறுதணிக்கை செய்யக்கோரி தொலைத்தொடர்பு நிறுவனத்தினர் மத்திய தணிக்கைத்துறையிடம் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

Sharing is caring!