2.0 படம் அடுத்த மாதம் 29ம் தேதி வெளியாக உள்ளது

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் 2.0 படம் அடுத்த மாதம் 29ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

துபாயில் இசை வெளியீட்டு விழா, ஐதராபாத்தில் டீசர் வெளியீட்டு விழா, சென்னையில் டிரைலர் வெளியீட்டு விழா நடத்த முதலில் திட்டமிட்டிருந்தார்கள். இசை வெளியீட்டு விழா மட்டும் துபாயில் பிரமாண்டமாய் நடந்தது. இரண்டு பாடல்களை வெளியிட்டனர். அதன்பின்னர் டீசருக்கு விழா எதுவும் நடக்காமல் யு-டியூப்பில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் நாளை(நவ., 3) டிரைலர் வெளியிடப்படுகிறது. டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடக்குமா என ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் டிரைலரை வெளியிட உள்ளனர். இந்த டிரைலர் வெளியீட்டு விழா, அதிக கெடுபிடிகளுக்கு இடையே நடக்கிறது.

விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்கின்றனர். இவர்களுடன் இந்தியா முழுக்க பல்வேறு மொழிகளில் இருந்து திரைப்பிரபலங்களும் பங்கேற்க உள்ளனர். அப்படி பங்கேற்கும் திரைப்பிரபலங்கள் ரஜினி, அக்சய் உள்ளிட்டவர்களுடன் நேரடியாக கேள்வி கேட்க, அவர்கள் பதில் அளிக்க உள்ளனர்.

மேலும் பத்திரிகையாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த விழாவில் பங்கேற்பவர்களுக்கு பாஸ் அளிக்கப்பட்டுள்ளது. பாஸ் உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். டிரைலர் வெளியீட்டு விழா நாளை காலை 8.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது.

Sharing is caring!