2018 ஆம் ஆண்டிற்கான அரச இலக்கிய விருது வழங்கல் விழா

2018 ஆம் ஆண்டிற்கான அரச இலக்கிய விருது வழங்கல் விழா இன்று வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் கலாநிதி விஜேதாஸ ராஜபக்ஸ , இராஜங்க அமைச்சர் மொஹன்லால் கிரேரு, இலக்கியவாதிகள் மற்றும் எழுத்தாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சிறந்த சுய பாடலாக்க இலக்கியத்திற்கான விருது அப்துல் புத்தூசுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த கவிதை இலக்கியத்திற்கான விருதினை யு.எல்.எம். ஆதிக் பெற்றுக்கொண்டார்.

சிறந்த சிறுகதை இலக்கியத்திற்கான விருதினை பதுளை சேனாதிராஜா சுவீகரித்தார்.

சிறந்த சுயநாவல் இலக்கியத்திற்கான விருதினை ஜோன் ராஜன் வென்றார்.

இதன்போது, வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கி மு.பொ என அழைக்கப்படும் பேராசிரியர் முருகேசு பொன்னம்பலம் கௌரவிக்கப்பட்டார்.

Sharing is caring!