2019ல் 4 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சசிகுமார்

‘சுந்தரபாண்டியன்’ படத்தில் இணைந்த சசிகுமாரும், இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனும் மீண்டும் ஒரு படத்தில் இணைத்திருக்கிறார்கள். சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன் ஆகிய படங்களை தொடர்ந்து எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் இந்த படம்.

மடோனா செபாஸ்டியன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ‘கொம்பு வச்ச சிங்கமடா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் கலையரசன், சூரி, யோகி பாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ் பிஷாரடி, துளசி, ஸ்ரீபிரியங்கா, தீபா ராமனுஜம் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கி, தொடார்ந்து ஒரேகட்டமாக பொள்ளாச்சி, தென்காசி, பழனி, கோவில்பட்டி விருது நகர், தென்காசி, குற்றாலம் ஆகிய பகுதிகளில் நடைபெறவிருக்கிறது. 1990 – 1994 காலகட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த பரபரப்பான ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் படமாம்.

கொம்புவச்ச சிங்கமடா படத்தில் நடித்த முடித்த கையோடு, சுந்தர்.சியின் அஸோஸியேட் டைரக்டர் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சசிகுமார். அதை முடித்த பிறகு சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். 2019ல் 4 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சசிகுமார்.

Sharing is caring!