2020 ல் பொன்னியின் செல்வன் ஆரம்பம்

இயக்குநர் மணிரத்தினத்தின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார், இப்படத்தின் படபிடிப்பு 2020ல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செக்க சிவந்த வானம் திரைப்படத்திற்கு பிறகு மணிரத்னம் தனது கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். பட்ஜெட் காரணமாக முன்னர் கைவிடப்பட்ட இந்த திரைப்படம் தற்போது மீண்டும் உருவாக உள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் விக்ரம், சிம்பு, ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


பொன்னியின் செல்வன் படத்திற்கு இசை புயல் ஏஆர் ரகுமான் இசையமைக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்த படம் வரும் 2020 ல் தனது படபிடிப்பை துவங்க உள்ளது.

Sharing is caring!