2021ல்தான் அரசியல் களம்… அதுவரை 5 படங்கள் நடிக்க ரஜினி முடிவு?

சென்னை:
இன்னும் 5 படங்கள் நடித்து முடித்த பின்னர்தான் ரஜினியின் அரசியல் பிரவேசம் இருக்கும் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ரஜினிகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் ரசிகர்களை கூட்டி விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்தார். ரசிகர் மன்றங்கள் மக்கள் மன்றங்களாக மாற்றப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

இதனால் 2 மாதங்களில் கட்சி பெயரை அறிவித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கபாலி, காலா, 2.0 படங்களில் நடித்தார். இப்போ பேட்டையையும் முடித்து விட்டார். ஆனால் கட்சி பற்றிய அறிவிப்பு இன்னும் தொடங்கவில்லை.

இதற்கு பின்னரும் கட்சி பற்றி அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் ரஜினியின் ஐடியாவோ வேறு மாதிரி உள்ளது. அவர்  5 படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

’பேட்ட’க்குப்பின் ரஜினியின் 166வது படத்தை ஏ.ஆர். முருகதாஸ், 167வது படத்தை சுரேஷ் கிருஷ்ணா, 168வது படத்தை கே.எஸ். ரவிக்குமார், 169வது படத்தை கார்த்திக் சுப்பராஜ், 170வது படத்தை எஸ்.எஸ். ராஜமவுலி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆண்டுக்கு 2 படம் என்றாலும் 2021ம் ஆண்டுதான் 5 படங்களையும்  முடிக்க முடியும். சட்டசபை தேர்தலில்தான் போட்டியிடுவேன் என்று ரஜினி கூறியது மிகச் சரியாக பொருந்தி வருகிறது. ஏனென்றால் தமிழகத்தில் 2021ம் ஆண்டுதான் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!