21 ஆம் நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணம்

21 ஆம் நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணம் இன்று தோன்றவுள்ளது.

இந்த சந்திர கிரகணம் இன்று இரவு 10.44 முதல் சுமார் 1 மணித்தியாலம் 43 நிமிடங்கள் வரை நீடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிக நீளமான இந்த சந்திர கிரகணத்தை இலங்கை மக்களால் அவதானிக்க முடியும்.

வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா உள்ளிட்ட பல நாடுகளிலும் சந்திர கிரகணம் தென்படவுள்ளது.

எதிர்காலத்தில், மிக நீளமான சந்திர கிரகணம் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் திகதி தென்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!