22 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட ‘சர்க்கார்’ படம், 74 ஸ்க்ரீன்களில்

தொடர் சர்ச்சைகளுக்குப் பின், நடிகர் விஜய் நடித்த ‘சர்க்கார்’ படம், தீபாவளி நாளில் திரைக்கு வந்திருக்கிறது. அந்தப் படத்துக்கு, கூடுதல் காட்சிகளை திரையரங்குகள், ரீலிசாகும் நாளில் இருந்து இரு நாட்களுக்கு மட்டும் போட்டுக் கொள்ளலாம் என, தமிழக அரசு அனுமதி வழங்கியத் தொடர்ந்து, சென்னையில் மட்டும் 22 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட ‘சர்க்கார்’ படம், 74 ஸ்க்ரீன்களில் காட்டப்பட்டது. இப்படி காட்டப்பட்ட காட்சிகளின் எண்ணிக்கை மட்டும் 336. இப்படி அதிக அளவில் காட்சிகள் காட்டப்பட்டு, ‘சர்க்கார்’ திரைப்படம் சாதனை படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே இதே போல வெளியான திரைப்படங்களான ‘கபாலி’ 283 காட்சிகள், ‘மெர்சல்’ படம் 279 காட்சிகள், ‘தெறி’ படம் 265 காட்சிகள், ‘விவேகம்’ படம் 261 காட்சிகள், ‘காலா’ படம் 253 காட்சிகள் என திரையிடப்பட்டன. அந்த சாதனைகளை தற்போது, சர்க்கார் முறியடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Sharing is caring!