3வது முறை…தனுஷீற்கு இசையமைக்கும் சந்தோஸ்

கொடி, வடசென்னை ஆகிய படங்களுக்கு பிறகு நடிகர் தனுஷ் திரைப்படத்திற்கு 3வது முறையாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான பேட்ட திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பேட்ட படத்துக்கு முன்பாக தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் கார்த்திக் சுப்பராஜ்.

அப்படத்தை இப்போது ஓய் நாட்  ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. இதில் தனுஷ் உடன் பல்வேறு ஹாலிவுட் நடிகர்களும் நடிக்கவுள்ளனர். இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.

தற்போது இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முன்னரே கொடி, வடசென்னை படங்களில் தனுஷுக்கு இவர்  இசையமைத்திருந்தார். மேலும் தனுஷ் தயாரித்த படங்களிலும் இவர் இசையமைப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!