36வது பிறந்தநாளை மோகன்லால் முன்னிலையில் கொண்டாடினார்

மலையாள நடிகர்களில் நடிப்பில் தணியாத வேட்கை கொண்டு எந்த ஒரு குறிப்பிட்ட இமேஜுக்குள்ளும் தன்னை அடைத்துக்கொள்ள விரும்பாத ஒரு யதார்த்த சினிமா கலைஞன் தான் பிருத்விராஜ். அவர் நடித்துள்ள படங்களின் கடந்தகால பட்டியலை எடுத்து பார்த்தீர்கள் என்றால் இது மிகையில்லை என்பது தெரியும்

அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து இந்த 14 வருடங்களில் 4 மொழிகளிலும் சேர்த்து இதுவரை 1௦௦ படங்களில் நடித்துள்ளார். நடிகராக மட்டுமின்றி, பாடகர், தயாரிப்பாளர் மற்றும் தற்போது இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார்.

தற்போது மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். நேற்று அவரது 36வது பிறந்தநாள் என்பதால் லூசிபர் செட்டிலேயே மோகன்லால் முன்னிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் பிருத்விராஜ்.

Sharing is caring!