38 வயதிலும் அழகு பதுமையாய் அனுஷ்கா!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா ஷெட்டியின் பிட்னஸை பார்த்து வியந்தவர்கள் ஏராளம்.

யோகா டீச்சரான அனுஷ்காவுக்கு படத்தில் அறிமுகம் ஆகும் வாய்ப்பு வந்தாலும், தொடக்கத்தில் என்னவோ கவனிக்கப்படாத நடிகையாகவே இருந்தார்.

அருந்ததி படத்தின் மூலம் அனைவரையும் அசரவைத்த அனுஷ்கா, பாகுபலி தேவசேனாவாக ரசிகர்களின் மனங்களில் ராணியாகவே குடியேறினார்.

நேற்று 38வது பிறந்தநாளை கொண்டாடிய அனுஷ்காவின் பிட்னஸ் சீக்ரெட் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது இவரது வழக்கம், அதாவது ஒருநாளைக்கு 6 லிட்டர் வரை தண்ணீர் அருந்துவாாம்.

அழகுக்காக கண்டகண்ட சிகிச்சைகளை மேற்கொள்ளாமல், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது இவரது வழக்கம், காலை உணவாக பிரட் மற்றும் தேன் சாப்பிடுவாராம்.

கடலை மாவுடன் எலுமிச்சை சாற்றை கலந்து பயன்படுத்துவது அனுஷ்காவின் வழக்கம், இது முழங்கையில் இருக்கும் கருமையை நீக்க பயன்படும்.

தினமும் தலைக்கு எண்ணெய் வைத்துவிடுவாராம், ஆலிவ் ஆயில், கடுகு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் அனுஷ்காவின் சாய்ஸ்.

காய்கறி, பழங்களை தினமும் அதிகம் எடுத்துக் கொள்வதுடன் இரவு உணவை 8 மணிக்கே முடித்து விடுவதும் இவரது வழக்கமாம், அப்போது தான் இரவு தூங்குவதற்கு முன் உணவு செரிமானம் ஆகுமாம்.

இதுதவிர தினமும் உடற்பயிற்சி செய்வதையும், யோகா செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

Sharing is caring!