5 வயதிலேயே பாலியல் தொல்லைக்கு உள்ளானேன்… நடிகை பார்வதி

கேரளா:
5 வயதிலேயே பாலியல் தொல்லைக்கு உள்ளாகி உள்ளேன் என்று நடிகை பார்வதி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

மரியான் உட்பட பல ஹிட் படங்களில் நடித்துள்ளவர் நடிகை பார்வதி.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையான இவர் பெண்களுக்கு எதிராக சினிமா துறையில் நடக்கும் விஷயங்கள் பற்றி அதிகம் பேசிவருகிறார்.

அதனால் அவருக்கு எந்த தயாரிப்பாளரும் வாய்ப்பு அளிக்க முன்வரவில்லை என்பதால் படவாய்ப்பு இன்றி அவர் இருக்கிறார்.
இந்நிலையில் பார்வதி தான் 4 அல்லது 5 வயதில் இருக்கும் போதே பாலியல் தொல்லைக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். அதை அறிந்துகொள்ளவே அவருக்கு 17 வருடங்கள் ஆனதாம்.

அதை பற்றி வெளியில் பேச இப்போது மேலும் 12 வருடங்கள் ஆகியிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!