50 நாட்களை கடந்தும் விஸ்வாசம் படத்திற்கு வரும் கூட்டம்

சென்னை:
50 நாட்களை கடந்த நிலையில் இன்றும் விஸ்வாசம் படத்திற்கு தான் அதிக கூட்டம் வருகிறது என்று வெற்றி திரையரங்க உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

விஸ்வாசம் படம் வெளியாகி இன்றோடு 50 நாட்கள் ஆகிறது. அதனால் படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கின் உரிமையாளர் ட்விட்டரில் விஸ்வாசம் பற்றி பதிவிட்டுள்ளார். 50 நாட்களை கடந்த நிலையில் இன்றும் விஸ்வாசம் படத்திற்கு தான் அதிக கூட்டம் வருகிறது என கூறியுள்ளார்.

கடைசி நேரத்தில் புக்கிங் ஓபன் செய்தாலும் விஸ்வாசம் காட்சிக்கு அதிகம் பேர் முன்பதிவு செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!