80 டேக்கா! படத்திற்காக கடும் உழைப்பை கொடுக்கும் விஜய் சேதுபதி

சென்னை:
விஜய் சேதுபதியா? அவரா? என்று ரசிகர்கள் மீண்டும்… மீண்டும்… கேள்வி எழுப்பி வருகின்றனர் எதற்காக தெரியுங்களா?

நடிகர் விஜய் சேதுபதி எந்த ரோலில் நடித்தாலும் அதில் மிக யதார்த்தமாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது பல படங்களில் விஜய் சேதுபதி நடித்துவந்தாலும், அவரது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது சூப்பர் டீலக்ஸ் படத்தை தான்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். படத்தில் திருநங்கையாக நடிக்க ஒரு ஷாட்டுக்கு 80 டேக் எடுத்துக்கொண்டாராம் அவர். படத்தை பார்த்த அனுராக் கஸ்யப் உள்ளிட்ட சில பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி தள்ளியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!