“96” இயக்குனருக்கு சிறந்த அறிமுக இயக்குனர் விருது

சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை 96 திரைப்படத்தை இயக்கிய பிரேம் குமார் பெறவுள்ளார்.  இந்த விருது தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகரும் இயக்குநருமான மாருதிராவ்வின் மகன் அமரர் கொல்லாப்புடி ஶ்ரீனிவாஸ் நினைவாகக்  21 வருடங்களாக கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 2001க்கு பிறகு இவ்விருதை வெல்லும் முதல் தமிழ் படம் ’96’ என்பது குறிப்பிடத்தக்கது.

96 திரைப்படம் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளிவந்து  பல விருதுகளை வென்றதுடன் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை  பெற்றது.  மேலும் சமந்தா, ஷர்வானந்த் நடிக்கவிருக்கும் ’96’ தெலுங்கு ரீமேக் வேலைகளும் நடந்து வருகிறது.

Sharing is caring!