96 கதை என்னுடையதுதான்… இயக்குனர் பிரேம் குமார் விளக்கம்

சென்னை:
96 கதை என்னுடையதுதான் என்று இயக்குனர் பிரேம் குமார் ஆதாரத்துடன் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

திரிஷா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இந்த படம் நல்ல வசூலையும் ஈட்டியது. இந்நிலையில் இந்த படத்தின் கதை என்னுடையது என்று இயக்குனர் பாரதிராஜாவின் உதவி இயக்குனர் ஒருவர் புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு 96 இயக்குனர் பிரேம்குமார் பிரஸ்மீட் வைத்து ஆதாரத்துடன் விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்தக் கதை என்னுடையது தான். இதை நான் 2016 ஏப்ரலில் ‘96’ என்ற பெயரில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். இந்த கதையை முழுமையாக எழுதி முடித்த பின்னர் முதலில் இயக்குனர் பாலாஜி தரணீதரனிடமும், நடிகர் விஜய் சேதுபதியிடமும் தான் சொன்னேன்.”

படத்தின் ரிலீஸ் முன்பு விளம்பரப்படுத்தப்பட்ட போது வராத பிரச்னை வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!