96 படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்கிறார் பாவனா

சென்னை:
தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்து செம ஹிட் அடித்த 96 படத்தின் கன்னட ரீமேக்கில் நடிகை பாவனா நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஜோடியாக நடித்த 96 படத்தை தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்யும் முயற்சிகள் தற்போது நடந்து வருகிறது.

கன்னடத்தில் 99 பெயரில் ரீமேக் ஆகும் இந்த படத்தில் பாவனா நடிக்கிறாராம். பாலியல் தாக்குதலுக்கு உள்ளான அவர் அதன் பிறகு நடிக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

96 படத்தை பார்க்காமலேயே அவர் ரீமேக்கில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் பாவனா. விஜய் சேதுபதி ரோலில் கோல்டன் ஸ்டார் கணேஷ் நடிக்கிறார். ஷூட்டிங் இந்த மாதம் 19ம் தேதி துவங்குகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!