96 படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கு ஜானகி தேவி பெயர்?

ஐதராபாத்:
96 படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கு ஜானகி தேவி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஜோடியாக நடித்த 96 படம் ஹிட் ஆன நிலையில் அதை தெலுங்கில் தற்போது அதே இயக்குனர் ரீமேக் செய்யவுள்ளார்.

அதில் நடிகை சமந்தா மற்றும் சர்வானந்த் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் ரீமேக் படத்திற்கு “ஜானகி தேவி” என பெயர் வைத்துள்ளார்கள் என தகவல் கசிந்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வரும் என்கின்றனர்.

96 படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் ஹீரோயின் பாடகி ஜானகியின் பாடல்களை அதிகம் பாடுவது போல காட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!